பிரேசில் அதிபராக 3-வது முறையாக பதவியேற்றார் லூலா டா சில்வா

பிரேசில் நாட்டின் புதிய அதிபராக லுலா டா சில்வா நேற்று பதவியேற்றார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பிரேசிலியா,

பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து விட்டு வந்துள்ள இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையில் பலப்பரீட்சை நடந்தது.

கொரோனா தொற்றை கையாண்ட முறை, அமேசான் மழைக்காடுகள் அழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஜெயீர் போல்சனரோ அரசு மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியானது. பிரேசில் தேர்தல் நடைமுறையின்படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பிரேசில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டதில் இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலு டா சில்வா 50.90 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் பிரேசில் அதிபராக வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில், பிரேசில் நாட்டின் புதிய அதிபராக லுலா டா சில்வா நேற்று பதவியேற்றார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com