

வழக்கமான வெள்ளை நூடுல்ஸ்களை ருசி பார்த்த ஜப்பானியர்களுக்கு, இந்த ஒளிரும் நூடுல்ஸ் புதுமையான அனுபவத்தை கொடுக்கிறதாம். இதை உணவு ஆராய்ச்சியாளரும், எழுத்தாளருமான குரரே உருவாக்கியிருக்கிறார்.
நூடுல்ஸ் மட்டுமின்றி, நூடுல்ஸுடன் பரிமாறப்படும் சூப் வகைகளும் ஒளிருகின்றன. வித்தியாசமாக காட்சியளிக்கும் இந்த நூடுல்ஸ், இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால், உடலுக்கு ஆரோக்கியமானது என்கிறார்கள். அதனால்தான் ஜப்பானியர்களின் விருப்பமான உணவாக நியான் நூடுல்ஸ் மாறியிருக்கிறது.