

டப்ளின்,
அயர்லாந்தின் டப்ளின் நகரில் ஐரோப்பிய அரசியல் சமூக உச்சிமாநாடு நடந்தது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது தலைவர்கள் சந்திப்பில் ஐஸ்லாந்து பெண் பிரதமர் கிறிஸ்டின் பிரோஸ்டா டோட்டிரை பிரான்ஸ் அதிபர் இம்மானு வேல் மெக்ரான் வாழ்த்துவதற்காக அவரை நோக்கி சென்று கட்டி அணைக்க முயன்றார்.
ஆனால் அதை தவிர்த்த ஐஸ்லாந்து பிரதமர் அந்த அணைப்பிலிருந்து விலகி ஒரு கையை மெக்ரானின் தோள் மீது வைத்தபடி பின்வாங்கி மேலும் தனது வலதுபுறம் இருந்த புகைப்படக் கலைஞரை பார்த்து ஏதோ ஒரு சைகையை செய்தார்.
இதில் கிறிஸ்டின் ஒருவித சங்கடத்துடன் காணப்பட்டார். ஆனால் மெக்ரான் எவ்வித தயக்கமுமின்றி புன்னகைத்தபடியே காணப்பட்டார். இந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
இதற்கு முன்பு இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் இதுபோன்ற செய்கையில் மெக்ரான் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.