மடகாஸ்கர்: கப்பல் விபத்தில் உயிரிழப்பு 64 ஆக அதிகரிப்பு.. 20 பேர் மாயம்!

விபத்தில் 64 பேர் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மடகாஸ்கர்: கப்பல் விபத்தில் உயிரிழப்பு 64 ஆக அதிகரிப்பு.. 20 பேர் மாயம்!
Published on

ஆன்டணானெரிவோ,

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் காணாமல் போயினர் என்ற முதல்கட்ட தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி விபத்தில் 64 பேர் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.மேலும், இன்னும் 20 பேரின் நிலை என்ன என்ற தகவல் கிடைக்கவில்லை.

கப்பலில் இருந்த 130 பயணிகளில் 45 பேர் மீட்கப்பட்டதாகவும், உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் துறைமுக அதிகார தலைவர் ஜீன் எட்மண்ட் தெரிவித்தார்.

இது சரக்குகளை கொண்டுசெல்லக்கூடிய கப்பல் என்றும், அதில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் அவர் கூறினார்.

மற்றொரு துறைமுக அதிகாரியான அட்ரியன் பேப்ரைஸ் கூறுகையில், கப்பலில் எதிர்பாராதவிதமாக தண்ணீர் உள்ளே புகுந்ததன் காரணமாக கவிழ்ந்து இருக்கலாம் என்று அவர் கூறினார்.

இந்த விபத்து நடந்த பகுதியில் ஆய்வுக்கு சென்ற போது, ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 39 பேர் பலியாகினர்.அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் இருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அந்நாட்டு மந்திரி பதவியில் இருக்கும் செர்ஜ் கெல்லே ஆவார். மந்திரி செர்ஜ் கெல்லே 12 மணி நேரம் கடலில் நீந்தி உயிர் பிழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com