வெனிசூலாவின் இயற்கை வளங்கள் மீது அமெரிக்காவுக்கு ஆசை; அதிபர் மதுரோ குற்றச்சாட்டு

வெனிசூலா நாட்டின் இயற்கை வளங்கள் மீது அமெரிக்கா ஆசை கொள்கிறது என அதிபர் நிகோலஸ் மதுரோ குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
வெனிசூலாவின் இயற்கை வளங்கள் மீது அமெரிக்காவுக்கு ஆசை; அதிபர் மதுரோ குற்றச்சாட்டு
Published on

காரகாஸ்,

வெனிசூலா நாட்டின் அதிபராக இருப்பவர் நிகோலஸ் மதுரோ. இந்நிலையில், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கைடோ, அதிபர் மதுரோ ஆட்சியை தூக்கி எறிவதற்கு தெருக்களில் இறங்கி போராடும்படி கடந்த ஏப்ரல் 30ந்தேதி பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை வலியுறுத்தினார்.

இதற்கு பதிலடியாக மதுரோ, அனைத்து பகுதிகள் மற்றும் மண்டலங்களை சேர்ந்த ராணுவத்தினர், மக்களுக்கும், அரசியல் அமைப்புக்கும் மற்றும் நாட்டுக்கும் முழு விசுவாசமுடன் இருக்கும்படி வலியுறுத்தினார்.

வெனிசூலாவில் அதிபரின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி வன்முறையாக உருவெடுத்தது. இதில் 240 பேர் காயமடைந்துள்ளனர் என ஐ.நா.வுக்கான மனித உரிமைகள் தூதரக அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் அதிபர் மதுரோ செய்தியாளர்களிடம் கூறும்பொழுது,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு வெனிசூலா நாட்டின் எண்ணெய், இயற்கை வளங்களான தங்கம், எரிவாயு, வைரங்கள் மற்றும் பிற பொருட்கள் தேவை. வெனிசூலா போரில் ஈடுபடாது. நாட்டுக்குள் ராணுவ தலையீடு இருக்காது.

ஆனால், இவையெல்லாம் எங்கள் நாட்டை காக்க நாங்கள் தயாராக இல்லை என பொருள் இல்லை. டொனால்டு டிரம்புக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க, அவரது முட்டாள்தனத்தினை நிறுத்த அனைத்து தொலை தொடர்புகளையும் நான் பயன்படுத்தி வருகிறேன் என கூறியுள்ளார். வெனிசூலா நாட்டின் இயற்கை வளங்கள் மீது அமெரிக்கா ஆசை கொள்கிறது. வெனிசூலா ஒருபொழுதும் விட்டு கொடுக்காது என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com