பப்புவா நியூ கினியாவில் ரிக்டர் 4.3 அளவில் லேசான நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் நேற்று ரிக்டர் 4.3 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பப்புவா நியூ கினியாவில் ரிக்டர் 4.3 அளவில் லேசான நிலநடுக்கம்
Published on

போர்ட் மோரெஸ்பை,

தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் தங்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடி வந்தனர்.

அந்நாட்டில் உள்ள பின்ஸ்ஹாபன் நகரில் இருந்து 33 கி.மீ. வடமேற்கில் பிஸ்மார்க் கடல் பகுதியில் சுமார் 55.5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு நேரப்படி மாலை 4.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com