

யஜ்னோ,
ரஷ்யாவின் குரில் தீவு கடலோர பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 23 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
யஜ்னோ மற்றும் குரில்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் நிலநடுக்கத்தினை உணர்ந்துள்ளனர். இதில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.