இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Published on

ஜகார்தா

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி தீவில் உள்ள மனாடோ நகரில் 68 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சில பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன; சில பகுதிகளில் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com