சிலி நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

சிலி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிலி நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
Published on

சாண்டியாகோ,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் எல் லொவா மாகாணம் சான் பெட்ரோ டி அடகெமொ நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

போலிவியா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள இந்நகரில் இருந்து 104 தொலைவில் 93 ஆழத்தில் நிலநடுகம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிங்கள் அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தின்போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com