கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

கிரேக்க நாட்டிலுள்ள கிரீட் தீவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
Published on

ஏதென்ஸ்,

கிரேக்க நாட்டிலுள்ள கிரீட் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அங்குள்ள மக்கள் அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறினர். முதற்கட்ட தகவலின் படி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 9.24 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. ஏதென்ஸில் உள்ள ஜியோடைனமிக் நிறுவனமானது கிழக்கு தீவிலுள்ள கடலுக்கு அடியில் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் 4.1 மற்றும் 4.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த போலிசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். முழுமையான பாதிப்பு குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் தீவு முழுவதும் உணரப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com