அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு

அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு
Published on

பியானோஸ்,

அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். அண்டை நாடான சிலியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கம் 171 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று அமெரிக்காவின் அலாஸ்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com