இலங்கை அதிபருடனான தமிழ் கட்சி பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று முதல் முறையாக பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.
இலங்கை அதிபருடனான தமிழ் கட்சி பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு
Published on

ஆனால், திடீரென இந்த பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டணியின் எம்.பி. சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. புதிய தேதியும் கூறப்படவில்லை. விரைவில் இச்சந்திப்பு நடந்து, பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். கடந்த 1987-ம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட 13ஏ அரசியல் சட்ட திருத்தத்தால், இலங்கையில் மாகாண கவுன்சில் ஆட்சிமுறை உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த மாகாண கவுன்சில்களை கலைக்க இலங்கை அதிபர் விரும்புகிறார். ஆனால், 13ஏ திருத்தம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி வலியுறுத்துகிறது. தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க 13ஏ திருத்தம் நீடிக்க வேண்டும் என்று இந்தியாவும் வற்புறுத்தி வருகிறது. இதுதொடர்பாகத்தான் இலங்கை அதிபர்-தமிழ் கட்சி இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com