ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மலேசியாவின் முன்னாள் பிரதமர் ரஜிப் ரசாக்கை அந்நாட்டு போலீஸ் கைது செய்தது. #NajibRazak
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது
Published on

கோலாலம்பூர்,

மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பேரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.) தோல்வியைத் தழுவியது.

எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக், பிரதமர் பதவியை இழந்தார். மேலும், 92 வயது மகாதீர் முகமது பிரதமர் ஆனார். அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பண கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின. இதனையடுத்து அவருக்கு எதிரான விசாரணையை ஊழல் தடுப்பு அமைப்பு தீவிரப்படுத்தியது.

இப்போது ஊழல் வழக்கில் ரஜிப் ரசாக்கை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக்கு எடுக்கலாம் எனவும் அத்தகவல்கள் குறிப்பிட்டுள்ளது என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com