ஆஸ்திரேலிய தூதரகத்தில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா: தாய்லாந்தில் பரபரப்பு

பாங்காக்கிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் உள்ள பெண்களின் கழிவறைகளில் ரகசிய கேமரா பொருத்தபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாங்காக்,

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆஸ்திரேலிய நாட்டின் தூதரகம் அமைந்துள்ளது. அந்த தூதரகத்தில் உள்ள பெண்களின் கழிவறைகளில் ரகசிய கேமரா பொருத்தபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, ஆஸ்திரேலிய தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், அனைத்து ஊழியர்களின் நலன் மற்றும் தனியுரிமையே வெளியுறவுத்துறைக்கு முன்னுரிமையாக உள்ளது. தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகிறோம் என்றார்.

எனினும் இதுகுறித்து கூடுதல் விவரங்களை அளிக்க அவர் மறுத்துவிட்டார்.

இதனிடையே தூதரகத்தில் மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி நடந்திருப்பதை இந்த சம்பவம் வெளிக்காட்டுகிறது என ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com