மொபைல் போனால் சினிமா தியேட்டரின் இருக்கையில் தலை சிக்கி உயிரிழந்தவர்

சினிமா தியேட்டரில் உள்ள இருக்கையில் நபரின் தலை சிக்கிக்கொண்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மொபைல் போனால் சினிமா தியேட்டரின் இருக்கையில் தலை சிக்கி உயிரிழந்தவர்
Published on

இங்கிலாந்தில் பிர்மிங்ஹாம் நகரில் உள்ள ஒரு தியேட்டரில் கடந்த 9-ஆம் தேதி மக்கள் திரைப்படத்தை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது இருக்கையில் உட்கார்ந்திருந்த நபரின் செல்போன் கீழே விழுந்துள்ளது. போனை குனிந்து அவர் எடுத்த நிலையில் திடீரென அவர் தலை இருக்கைக்கு நடுவில் சிக்கி கொண்டுள்ளது. பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஒருவாரம் கழித்து உயிரிழந்துவிட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

எனினும், இருக்கைக்கு இடையே தலை மாட்டிக் கொண்ட பின்னர் மூச்சுவிட முடியாமல் தவித்ததாகவும், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் பல தியேட்டர்களை நடத்தி வரும் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்த சம்பவத்துக்கான சரியான காரணம் குறித்து முழு விசாரணை நடந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com