அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை

டிரம்பை கொல்ல முயற்சி செய்த வழக்கில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதியானதை அடுத்து தண்டனை அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், புளோரிடா வில் உள்ள கோல்ப் மைதானத்தில் விளையாட கொண்டிருந்தார். அப்போது புதருக்குள் பதுங்கி யிருந்த ரைன் ரவுத் (வயது 59) என்ற நபர், டிரம்பை குறிவைத்து சுட முயன்றார். உடனடியாக ரகசியப் படை வீரர்கள் தகுந்த நேரத்தில் அந்த நபரை கண்டறிந்து தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Also Read
இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினேன் - டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை

இந்தத் தாக்குதல் முயற்சி தொடர்பாக கைது செய்யப்பட்ட ரைன் ரவுத் மீதான வழக்கு புளோரிடா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்ட நிலையில், நீதிபதி எய்லின் கேனன் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், ஆயுதக் குற்றங்களுக்காக அவருக்கு கூடுதலாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com