ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட வாலிபர்

இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட வாலிபர்
Published on

கென்யாவின் கஜியாடோ மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரையும் திருமணம் செய்ய விரும்பிய அவர் இது குறித்து காதலிகளிடம் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத காதலிகள் தங்கள் காதலனை திருமணம் செய்ய ஒப்பு கொண்டனர். அதன்படி உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் குறித்த இளைஞர் தனது இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த பின்னர் இரண்டு மணப்பெண்களும் ஜாலியாக ஆடி பாடினார்கள். கென்யாவில் பலதார மணம் என்பது சகஜம் தான். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com