பிறப்புறுப்பு மற்றும் தொப்புள்ளை நீக்கி வேற்றுகிரகவாசி போல் மாறிய வாலிபர்

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பல அபாய நடைமுறைகளை பின்பற்றி வேற்றுக்கிரகவாசிகளைப் போல் தன்னை மாற்றிகொண்டு வாழ்ந்து வருகிறார்.
பிறப்புறுப்பு மற்றும் தொப்புள்ளை நீக்கி வேற்றுகிரகவாசி போல் மாறிய வாலிபர்
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த வின்னி ஒ (22) 110 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து தன்னை வேற்றுக்கிரகவாசியை போல் மாற்றிக்கொள்ள முயன்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் முழுமையான வேற்றுக்கிரகவாசியாக மாற அசைப்பட்டு அவரது பிறப்புறுப்பையும் நீக்கியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தன்னுடைய 17 வயதில் இருந்தே இந்த முயற்சியை துவங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் மாடலாக இருந்த இவர் பின்னர் அதிக செலவில் அறுவை சிகிச்சைகளை செய்து வேற்றுக்கிரகவாசி போல் அவரை மாற்றிக்கொண்டுள்ளார். சுமார் 9 லட்ச ரூபாய் செலவு செய்து இவரது பிறப்புறுப்பு மற்றும் தொப்புள் போன்றவற்றை நீக்கியுள்ளார்.

இது குறித்து கூறிய வின்னி ஒ வேற்றுக்கிரகவாசியாக மாறுவது அவரது வாழ்நாள் கனவு என்றார். அதுமட்டுமின்றி பூமியில் வேற்றுக்கிரகவாசியாக வாழ்வது சாத்தியம் எனவும் அதற்கு அதிஷ்டம் செய்திருக்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com