செவ்வாய்கிரகத்தில் நிலை நிறுத்தப்பட்ட முதல் நில அதிர்வுமானி

செவ்வாய்கிரகத்தில் முதன் முதலாக இன்சைட் ரோபோ நில அதிர்வுமானியை நிலை நிறுத்தி உள்ளது.
செவ்வாய்கிரகத்தில் நிலை நிறுத்தப்பட்ட முதல் நில அதிர்வுமானி
Published on

வாஷிங்டன்

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரையிறக்கியுள்ளது. தி இன்சைட் (The InSight probe) எனப்படும் அந்த ரோபோ, செவ்வாய் கிரகத்தின் ஆழமான மற்றும் உள் பகுதிகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டுள்ளது.

இன்சைட் ரோபோ சில வாரங்களுக்கு முன்னர் செவ்வாய் கிகரத்தில் தரையிறங்கியிருந்தது. இந்த ரோபோ இயந்திரம் செவ்வாய் கிரகத்தின் மத்திய ரேகை பகுதிக்கு அருகே உள்ள அலிசிம் பிளானீசியா என்ற பகுதியில் தரையிறங்கியது. இன்சைட் ரோபோ தரையிறங்கிய சில நிமிடங்களில் நிலப்பரப்பின் முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியது.

தி இன்சைட் ரோபோ தன்னுடன் எடுத்துச்சென்ற நில அதிர்வுமானி (Seismometer) கருவியை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது. நில அதிர்வுமானி என்பது நிலநடுக்கத்தின் வேகம் மற்றும் திறன் ஆகியவற்றினை அளக்கும் கருவி ஆகும். இக்கருவியானது செம்பின் நிறத்தில் காணப்படுவதுடன், 1.636 மீட்டர்கள் உயரமுடையதாகவும் இருக்கின்றது. இந்த கருவியை நிலைநிறுத்தும் காட்சியையும் இன்சைட் ரோபோ படமெடுத்து அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com