

ஆஸ்திரேலியாவில் கண்களில் உள்ள வெண் பகுதியில் வண்ணங்களை ஊசி மூலம் செலுத்திக் கொள்கிறார்கள். இதுவரை 20 பேர் நிரந்தரமாகக் கண்களை வண்ணமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த லூனா கோப்ரா கண்களை வண்ணமாக மாற்றும் பணியைச் செய்து வருகிறார்.
இது மிகவும் ஆபத்தான விஷயம். இந்த டாட்டூ வண்ணங்கள் மூலம் நிரந்தரமாகப் பார்வை இழப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது என்று கண் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இருப்பினும், பேஷன் பிரியர்கள் இந்த எச்சரிக்கை செய்திகளை கவனிப்பதாக இல்லை. அதனால் பச்சை, நீலம், கருப்பு, மஞ்சள் என்று விருப்பப்பட்ட நிறக் கண்களோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.