ஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு ; 8 பேர் பலி

ஜெர்மனியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர்.
ஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு ; 8 பேர் பலி
Published on

பெர்லின்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் ஹனாவு நகரில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். ஹனாவு நகரில் உள்ள 2 பார்களில், தனித்தனியே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 8 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.பயங்கரவாத நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com