பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
Published on

தெற்கு பிலிப்பைன்சில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக இது பதிவாகியுள்ளது . இந்த பயங்கர நிலநடுக்கத்தையடுத்து, சில கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பிற்காக உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சேதம் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

மிண்டனாவோ தீவில் உள்ள ஜெனரல் சாண்டோஸ் நகருக்கு தென்மேற்கே 13 கிலோமீட்டர் தொலைவிலும் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்,தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7.37 மணிக்கு இதற்கிடையில், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்ட தகவலின்படி, பிலிப்பைன்ஸ் நாட்டின் சில கடலோரப் பகுதிகளில் 3 மீட்டர் (10 அடி) உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும். மேலும், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் சில கடலோரப் பகுதிகளில் 1 மீட்டர் (3 அடி) உயரம் வரை அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com