ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ; பாதுகாப்பு கருதி 2,500 பேர் வெளியேற்றம்

காட்டுத்தீயால் இதுவரை 2,700 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமானது.
ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ; பாதுகாப்பு கருதி 2,500 பேர் வெளியேற்றம்
Published on

டோக்கியோ,

ஜப்பானின் இவாதே மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஓட்சுச்சி(Otsuchi) நகரை நோக்கி வேகமாக பரவி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் 2,500-க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற நகர நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு வீரர்கள் இரவு, பகலாக முயன்று வருகின்றனர்.

இந்த காட்டுத்தீயால் இதுவரை 2,700 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமானதாகவும், 8 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தரை மற்றும் வான்வழி மூலம் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com