நிதி முறைகேடு குற்றச்சாட்டு: மொரிசீயஸ் அதிபர் அமீனா குரிப் பாகிம் ராஜினாமா

நிதி முறைகேடு குற்றச்சாட்டில் மொரிசீயஸ் அதிபர் அமீனா குரிப் பகிம் ராஜினாமா செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நிதி முறைகேடு குற்றச்சாட்டு: மொரிசீயஸ் அதிபர் அமீனா குரிப் பாகிம் ராஜினாமா
Published on

புதுடெல்லி,

நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மொரிசீயஸ் அதிபர் அமீனா குரிப் பாகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பெண் அதிபரான அமீனா குரிப் பாகிம், நாட்டு நலன் கருதி ராஜினமா செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். வரும் 23 ஆம் தேதி முதல் அமீனா குரிப் பாகிம் ராஜினாமா அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

மொரிசீயஸில் தொழில் துவங்க திட்டமிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம், ஒன்று வழங்கிய கடன் அட்டையை பயன்படுத்தி, விலை உயர்ந்த ஆபரணங்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதாக அமீனா குரிப் பாகிம் மீது குற்றம் சாட்டப்பட்டது. லண்டனைச்சேந்த தொண்டு நிறுவனத்தின் கடன் அட்டையை தவறுதலாக பயன்படுத்தி விட்டதாக அமீனா குரிப் பாகிம் அண்மையில் விளக்கம் அளித்து இருந்தார்.

சுமார் 27 ஆயிரம் டாலர் தொகைக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்த அமீனா குரிப் பாகிம்பதவி விலக போவதில்லை என்று கடந்த வாரம் அறிவித்து இருந்தார். ஆனால்,அமீனா குரிப் பாகிம் ராஜினாமா செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் இன்று தெரிவித்துள்ளார். பதவி விலகல் தொடர்பாக கரிப் பகிம் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. மொரிசீயஸின் முதல் பெண் அதிபரான அமீனா குரிப் பாகிம் (வயது 58) கடந்த 2015 ஆம் ஆண்டு அதிபர் பொறுப்பை ஏற்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com