இருளை தாண்டி ஒளி பிறக்கட்டும் - ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து

ஈரானிய மக்களுக்குத் தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் நவ்ரூஸ் வாழ்த்துக்களை இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இருளை தாண்டி ஒளி பிறக்கட்டும் - ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து
Published on

டெல் அவிவ்,

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய தாக்குதலில் காயமடைந்து உள்ளார் என்றும் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்றும் மத்திய கிழக்கு பகுதியில் தகவல்கள் பரவின.

இதற்கு முன்பு, கடைக்கு சென்று காபி குடிக்கும் வீடியோவை வெளியிட்டார். அப்போது, தன்னுடைய இரு கைகளையும் அடுத்தடுத்து உயர்த்தி, காண்பித்து 5 விரல்கள் உள்ளன என காட்டினார்.

இந்நிலையில் ஈரான் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் அந்நாட்டு மக்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையிலும் நவ்ரூஸ் மற்றும் நெருப்பு திருவிழாவிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் நான் வாழ்த்துவது போலவே, 'ஒளித் திருவிழா'வுடன் தொடங்கும் இந்தத் திருவிழா காலம் மகிழ்ச்சிகரமானதாக அமைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இணையத்தில் பரவிய எ.ஐ. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த திடீர் வீடியோ வெளியானதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com