

வாஷிங்டன்
அமெரிக்க வெளியுறவுச் செயலர் பதவியில் இருந்து ரெக்ஸ் டில்லர்சனை டொனால்டு டிரம்ப் நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக சி.ஐ.ஏ உளவு அமைப்பின் இயக்குநர் மைக் போம்பேயோ நியமிக்கப்பட்டுள்ளார்.
ரெக்ஸ் டில்லர்சன் செய்த பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ள டிரம்ப், புதிய வெளியுறவுச் செயலர் சிறப்பாகப் பணியாற்றுவார் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கினா ஹாஸ்பல் சி.ஐ.ஏ.வின் முதல் பெண் இயக்குநராகவும் டிரம்ப் நியமிக்கப்பட்டு உள்ளார். பயங்கரவாதிகளை சித்திரவதை செய்வதில் இவர் ஒரு முக்கிய நபராக இருப்பதாகக் கருதப்படுகிறார்.
பதவி நீக்கம் தொடர்பாக முன்கூட்டி டில்லர்சனிடம் தெரிவிக்கப்படவில்லை என்றும் வடகொரியாவுடனான உறவுகள் வெகுவாக முன்னேறி வருவதால் அவர் பதவியில் நீடிக்கவே விரும்பினார் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து டொனால்டு டிரம்ப் கூறும் போது:-
"எல்லாம் நன்றாகவே போனாலும், சில விடயங்களில் முரண்பட்டோம். இரான் உடனான ஒப்பந்தம் மோசமானது என நான் நினைத்தேன். ஆனால், அவர் அதை சரியென்று நினைத்தார்," ரெக்ஸ் மிகவும் நல்ல மனிதர். அவரை நான் மிகவும் விரும்புகிறேன்.
கினா, எனக்கு மிகவும் நன்றாகத் தெரிந்தவர், அவருடன் நான் மிகவும் நெருக்கமாக பணிபுரிந்தவன், சி.ஐ.ஏ.வின் முதல் பெண் இயக்குனர் ஆவார். அவர் ஒரு சிறந்த மனிதர், நான் நன்றாக அறிந்திருக்கிறேன் என கூறி உள்ளார்.
'தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்' பத்திரிகையில் , சி.ஐ.ஏ.வின் காவலில் வைக்கப்பட்டிருந்த மற்றும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு குழுவில் கினா இருந்தார், சித்திரவதை என விவரிக்கப்பட்டுள்ள பல நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளதாக பல நிபுணர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் கூறி உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது
சித்திரவதை திட்டத்தில் அவரது பங்கை முக்கிய செனட்டர்கள் சுட்டி காட்டினர். கடந்த செவ்வாயன்று அமெரிக்க காவலில் உள்ள கைதிகளின் சித்திரவதை அமெரிக்க வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகும் என்று சக்திவாய்ந்த செனட் ஆயுத சேவைகள் குழுவின் தலைவர் குடியரசுக் கட்சி செனட்டர் ஜான் மெக்கெய்ன் கூறினார்.