

டாக்கா,
வங்காளதேச நாடாளுமன்ற சபாநாயகரை இந்திய தூதர் இன்று சந்தித்தார்.
வங்காளதேசத்திற்கான இந்திய தூதர் தினேஷ். இவர் இன்று வங்காளதேச நாடாளுமன்ற சபாநாயகரை சந்தித்தார். வங்காளதேச நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உதன் அகமதுவை சந்திதார். அதேபோல், நாடாளுமன்ற துணை சபாநாயகர் பிரிஸ்டர் கெசர் கமலையும் தினேஷ் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது, நாடாளுமன்ற குழுக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நாடாளுமன்ற ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வங்காளதேச நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் இந்தியாவுக்கு வருமாறு இந்திய தூதர் தினேஷ் அழைப்பு விடுத்தார்.