அதிபர் தேர்தலில் தோல்வி: டிரம்பை விவாகரத்து செய்ய மெலனியா டிரம்ப் முடிவா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுள்ள டிரம்பை அவர் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டதாக முன்னாள் உதவியாளர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அதிபர் தேர்தலில் தோல்வி: டிரம்பை விவாகரத்து செய்ய மெலனியா டிரம்ப் முடிவா?
Published on

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுள்ள டிரம்பை அவர் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டதாக முன்னாள் உதவியாளர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் மூன்றாவது மனைவி மெலானியா ஆவார். இருவருக்கும் 25 வயது வித்தியாசம் உள்ளது. டிரம்புக்கும் - மெலனியாவுக்கும் திருமணம் நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை மெலனியா டிரம்ப் விவகாரத்து செய்து விடுவார் என்று வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர் கூறியுள்ளார்.முன்னாள் உதவியாளர் ஸ்டீபனி வோல்கோஃப் கூறூகையில், டிரம்ப் - மெலானியாவின் மகன் போரனுக்கு சொத்தில் சமமான பங்கை வழங்க மெலனியா திருமணத்திற்கு பிந்தைய ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் என கூறியுள்ளார்.

மற்றொரு உதவியாளர் ஒமரோசா மனிகவுல்ட் நியூமன் கூறுகையில், தம்பதியின் 15 ஆண்டுகால திருமண பந்தம் முடிந்துவிட்டது, அவர் பதவியில் இருந்து வெளியேறினால் மெலனியா டிரம்ப் விவகாரத்து செய்து விடுவார். இதற்காகவே மெலனியா காத்திருக்கிறார் என்றார்.

டிரம்ப் பதவியில் இருக்கும் போது மெலானியா விவகாரத்து செய்ய முயற்சித்தால், டிரம்ப்புக்கு பெரும் அவமானமாக அமையும். அதோடு மெலனியாவை தண்டிக்க டிரம்ப் வழியை கண்டுபிடிப்பார் என அவர் கருதுகிறார் என கூறியுள்ளார்.

டிரம்ப் - மெலனியா இடையே மனக்கசப்பு இருந்ததாக முன்பே தகவல்கள் வந்தாலும் இதுவரை அவர்கள் இந்த தகவலை மறுத்தே வ்ந்துள்ளனர். எனவே, இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com