மீம்ஸ் பிரபல சீம்ஸ் நாய் மரணம்...! நெட்டிசன்கள் கவலை...!

சில வருடங்களாக மீம்ஸ் மூலம் இணையத்தில் பிரபலமாக இருந்த சீம்ஸ் நாய், புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைந்தது.
மீம்ஸ் பிரபல சீம்ஸ் நாய் மரணம்...! நெட்டிசன்கள் கவலை...!
Published on

ஹாங்காங்,

சீனாவின் ஹாங்காங்கைச் சேர்ந்த நாய், பால்ட்சே. இந்த நாயின் ஓனர், இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தொடங்கி அதில் இதன் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அவை அனைத்தும் இணையதளத்தில் வைரலானது.

மீம்ஸ் கிரியேட்டர்கள், இந்த நாய்க்கு செல்லமாக சீம்ஸ் எனப் பெயரிட்டு காமெடி வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். அவை பார்ப்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தின. இவ்வாறு சீம்ஸ் நாய் உலகம் முழுவதும் பிரபலமானது.

இந்நிலையில் சீம்ஸூக்கு புற்றுநோய் தாக்கியது. கடந்த வெள்ளிக்கிழமை அதற்கு, தோராசென்டெசிஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு சீம்ஸ் கண் விழிக்கவில்லை. பரிசோதித்த டாக்டர்கள், சீம்ஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது சீம்ஸ் ஓனர் மட்டுமல்லாமல் உலகில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு மீம்ஸ் கிரியேட்டர் உள்பட அனைத்து நெட்டிசன்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com