அமெரிக்க பாலத்தில் மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல் - அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்க பாலத்தில் மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல் - அதிர்ச்சி சம்பவம்
Published on

வாஷிங்டன்,

மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான கப்பல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்லின் நகருக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 277 பேர் பயணித்தனர்.

புரூக்லின் பாலம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக பாலத்தின்மீது கப்பல் மோதியது. இந்த சம்பவத்தில் கப்பலில் பயணித்த 19 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com