மெக்சிகோ: படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி?

வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ.
மெக்சிகோ: படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி?
Published on: 

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவில் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டின் எசண்டனா நகரில் இருந்து நேற்று படகு புறப்பட்டுள்ளது. பசுபிக் கடலில் சென்ற அந்த படகில் 27 பேர் பயணித்தனர். பயணிகள் அனைவரும் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

படகு விபத்து - 11 பேர் பலி?

இந்நிலையில், நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த மெக்சிகோ கடற்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் கடலில் மூழ்கி 11 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேவேளை, கடலில் மூழ்கி மாயமான 11 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com