

மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்து 20 ஆயிரத்து 596 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோன்று உயிரிழப்பு எண்ணிக்கையும் 2 லட்சத்து 46 ஆயிரத்து 203 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அந்நாட்டு மக்கள் தொகையில் வயது வந்தோரில் இதுவரை மொத்தம் 5.14 கோடி மக்களுக்கு (57 சதவீதம்) குறைந்தது ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. 2.75 கோடி பேருக்கு முழு அளவில் (இரண்டு டோஸ்) கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.