மெக்சிகோ: கடையில் தீ விபத்து; 23 பேர் பலி

தீ விபத்து சம்பவம் பற்றி அறிந்த ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
மெக்சிகோ: கடையில் தீ விபத்து; 23 பேர் பலி
Published on

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டில் வடமேற்கே அமைந்த சொனோரா மாகாணத்தில் ஹெர்மோசில்லோ நகரில் உள்ள கடை ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதில் பலர் சிக்கி கொண்டனர். கரும் புகை சூழ்ந்து அவர்களால் தப்பி வெளியே வர முடியவில்லை.

இந்த விபத்தில் சிக்கி 23 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் பற்றி அறிந்த ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக, குழுக்களை அனுப்பும்படி உள்துறை மந்திரிக்கு கிளாடியா உத்தரவிட்டு உள்ளார். தீயணைப்பு அதிகாரிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com