அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசா: மெக்சிகோ அதிபர் அறிவிப்பு

அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்பட உள்ளதாக மெக்சிகோ அதிபர் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மெக்சிகோ சிட்டி,

அமெரிக்க நாட்டில் உள்ள பல மாகாணங்கள் தங்களது குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கி வருகிறது. இதனால் மத்திய அமெரிக்காவில் இருந்து வேலைக்காக அமெரிக்கா செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. ஏனெனில் மத்திய அமெரிக்காவில் வசிப்பவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டுமானால் மெக்சிகோ நாட்டை கடக்க வேண்டும். அது அவர்களுக்கு வேலை கிடைப்பதில் மிகவும் சிக்கலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், `மெக்சிகோவில் உள்ள ரெயில் பாதை போன்ற பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் மனிதவளம் தேவைப்படுகிறது. எனவே மெக்சிகோவில் பணிபுரிவதற்காக மத்திய அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர்கள் மெக்சிகோவில் சட்டப்பூர்வமாக தங்கலாம்' என தெரிவித்தார்.

அதிபர் மானுவேலின் இந்த அறிவிப்பு மத்திய அமெரிக்கர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com