அடுத்த ஓராண்டில் ஏஐ செய்யப்போகும் சம்பவம்: மைக்ரோசாப்ட் அதிகாரி பகீர் தகவல்

அடுத்த 12 முதல் 18 மாதங்களில் வேலைவாய்ப்பு சந்தையில் ஏஐ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
Image credits:Grok AI
Image credits:Grok AI
Published on

வாஷிங்டன்,

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு டெக் உலகில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. பல மணி நேரம் மனித சக்தியால் செய்த வேலைகளை ஒரு நிமிடத்தில் எளிதாக முடித்து விடுகின்றன. இதனால், ஏஐ பயன்பாடு பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து உள்ளது. குறிப்பாக ஐடி துறையில் ஏஐ பெரும் புரட்சியையே உண்டு பண்ணிவிட்டது என்று சொல்லலாம். ஏஐ ஆதிக்கம் காரணமாக ஒயிட் காலர் வேலைகள் பெரும் அடியை சந்திக்கும் என்று அத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள். இது ஐடி உள்பட பல்வேறு துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவு தலைவர் முஸ்தபா சுலைமான் இது தொடர்பாக பேசியிருக்கும் தகவல்தான் தற்போது சர்வதேச அளவில் பணியாளர்கள் இடையே ஹாட் டாபிக்காக உள்ளது.

முஸ்தபா சுலைமான் கூறுகையில், அடுத்த 12 முதல் 18 மாதங்களில் வேலைவாய்ப்பு சந்தையில் ஏஐ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக வெள்ளை காலர் (white-collar) பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் அதிகமாக பாதிக்கப்படலாம். தினசரி கணினி முன் அமர்ந்து சட்டம், கணக்கியல், மார்க்கெட்டிங் அல்லது திட்ட மேலாண்மை போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களின் வேலைகளில் உள்ள அன்றாட டாஸ்க்குகளில் பெரும்பங்கை செயற்கை நுண்ணறிவு தானியங்கி முறையில் மேற்கொள்ளக்கூடும். மனிதர்கள் செய்யும் பல பணிகளை ஏஐ கருவிகள் துல்லியமாக முடிவுக்கும் என்பதால், இது சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com