பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு காரணமான பெண் ...! அப்போதே எச்சரித்த மைக்ரோசாப்ட் நிறுவனம்!

பெண் ஊழியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக அப்போதைய மைக்ரோ சாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்சை அந்நிறுவனம் எச்சரித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு காரணமான பெண் ...! அப்போதே எச்சரித்த மைக்ரோசாப்ட் நிறுவனம்!
Published on

வாஷிங்டன்

உலகின் முதல் 10 கோடீசுவரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்களுள் ஒருவருமான பில் கேட்ஸ் உலகளவில் மிகவும் மதிப்புவாய்ந்த மனிதராக திகழ்கிறார். மெலிண்டாவுடனான அவருடைய 27 ஆண்டுகால திருமண உறவை முறித்துக்கொள்வதாக கடந்த மே மாதம் 3ம் தேதி அறிவித்தார்.

அவருடைய 125 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை குறைந்த வரியில் பிரித்துக் கொள்வதற்காக வெல்த் டாக்ஸை குறைப்பதற்காக பில் கேட்ஸ் விவாகரத்து செய்து கொள்கிறார் என பல யூகங்கள் பேசப்பட்டன.

பில் கேட்ஸ் 2008ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பதவியில் இருந்து விலகினார். மேலும் 2020ம் ஆண்டு மார்ச்சில் இயக்குனர் பதவியில் இருந்தும் விலகினார். இதனிடையே பெண் ஊழியர் ஒருவருக்கு தகாத முறையில் இ-மெயில் அனுப்பியதற்காக, 2008ம் பில் கேட்சை மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டித்ததாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவன முழு நேர பெண் ஊழியர் ஒருவருக்கு பில் கேட்ஸ் தகாத முறையில் மின்னஞ்சல் அனுப்பியது கண்டறியப்பட்டதாகவும். பில் கேட்ஸ் அந்த பெண் ஊழியரை சந்திப்பதற்காக அலுவலகத்துக்கு வெளியே வரச் சொன்னதாகவும் அந்த இ-மெயிலில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அந்த பெண்ணுடன் ஏற்கனவே 20 ஆண்டுகளாக பில் கேட்ஸ் உறவு வைத்துக்கொண்டதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது. இ-மெயில் விவகாரம் தெரியவந்ததை அடுத்து மைக்ரோசாப்ட் இயக்குனர்கள் குழுவினர் பில் கேட்ஸ் இதனை கைவிடுமாறு எச்சரித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பில் கேட்ஸ் இதனை ஒப்புக்கொண்டு, இனி இப்படி நடக்காது என மன்னிப்பு கோரியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு மைக்ரோசாப்ட் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த செய்தி உண்மை தான், மேற்கொண்டு தெரிவிக்க எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தொழிலில் சக்கரவர்த்தியாக திகழ்ந்த பில் கேட்ஸ், கொடையாளராகவும் திகழ்கிறார். கேட்ஸ் மெலிண்டா என்ற அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். அவருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது. இதனிடையே அவரின் மதிப்பு சரிவுக்கு இந்த பெண்ணே காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com