ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ரிக்டர் 4.3 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
Published on

காபுல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று இரவு 11.48 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் 110 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com