

காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலீபான் பயங்கரவாத இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதில், உருஜ்கன் மாகாணத்தில் கிசாப் மற்றும் தே ராவூத் மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இந்த மோதலில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரிடம் இருந்து சில பகுதிகளை தலீபான் இயக்கத்தினர் கைப்பற்றி உள்ளனர். இதனால் அரசுக்கு பலத்த சவால் எழுந்துள்ளது.
இந்நிலையில், பயங்கரவாதிகளை ஒடுக்கும் ராணுவத்தினரின் சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய உருஜ்கன் மாகாணத்தில் தரின்கோட் மற்றும் கிசாப் மாவட்டங்களில் தலீபான் பயங்கரவாத இயக்கம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், தலீபான் இயக்கத்தின் 12 ஊடுருவல்காரர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர். நாட்டில் நீண்டகால போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதி பேச்சுவார்த்தை முயற்சி வெற்றியடையாத நிலையிலேயே உள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் பற்றி தலீபான் இயக்கத்தினர் உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை.