தாய்லாந்து - கம்போடியா மோதலால் இடம்பெயரும் மக்கள்


தாய்லாந்து - கம்போடியா மோதலால் இடம்பெயரும் மக்கள்
x

எல்லை பகுதியில் அமைந்துள்ள பழங்கால இந்து கோவில் யாருக்கு சொந்தம்? என்பதே இருநாடுகளின் மோதல்களுக்கு மையப்புள்ளியாக உள்ளது.

கம்போடியா,

தாய்லாந்து - கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த எல்லை பிரச்சினை, ஜூலையில் மோதலாக வெடித்தது. ஐந்து நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மலேஷிய அதிபர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால், அக்டோபரில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

கடந்த டிசம்பர் 7ம் தேதி நடந்த மோதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், மீண்டும் இரு நாடுகளுக்கிடையே சண்டை மூண்டுள்ளது. ஒரு வாரமாக மோதல் நீடிக்கும் நிலையில், இரு தரப்பிலும் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர், தாய்லாந்து- கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

கம்போடியா எல்லையில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் இடங்களில், தாய்லாந்து மீண்டும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கனரக பீரங்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுவதாக கம்போடியா புகார் கூறி வருகிறது.

இந்தநிலையில், தாய்லாந்து - கம்போடியா இடையே நாளுக்குநாள் அதிகரித்து வரும் ராணுவ தாக்குதல்களால், தாய்லாந்தில் 4 லட்சம் பேரும், கம்போடியாவில் 5 லட்சம் பேரும் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

எல்லை பகுதியில் அமைந்துள்ள பழங்கால தா முயென் தாம் என்ற இந்து கோவில் யாருக்கு சொந்தம்? என்பதே இருநாடுகளின் மோதல்களுக்கு மையப்புள்ளியாக உள்ளது. டிசம்பர் 7-ல் மீண்டும் தொடங்கிய மோதலில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

1 More update

Next Story