

கேப்டவுண்,
தென்ஆப்பிரிக்காவின் கேப் மாகாணத்தில் உள்ள கெபெர்ஹா நகரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்குள்ள ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த மற்றொரு மினிபஸ் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு வயது முதல் நான்கு வயது வரை உள்ள இரண்டு குழந்தைகளும் அடங்குவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.