சுரங்க விபத்து.. 14 நாட்களுக்குப் பின் உயிருடன் தொழிலாளி மீட்பு..

14 நாட்களுக்குப் பிறகு இருண்ட சுரங்கத்திற்குள் டார்ச் லைட் வெளிச்சம் தெரிவதைக்கண்டு வீரர்கள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

சுரங்க விபத்து.. 14 நாட்களுக்குப் பின் உயிருடன் தொழிலாளி மீட்பு..
Published on

மெக்சிகோ,

மெக்சிகோ நாட்டின் சினலோவா மாகாணத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கத்தில் கடந்த மாதம் திடீரென வெள்ளம் புகுந்தது. இதில் சுரங்கத்தின் 300 அடி ஆழத்தில் 2 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என கருதப்பட்ட நிலையில் மீட்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சுமார் 14 நாட்களுக்குப் பிறகு இருண்ட சுரங்கத்திற்குள் டார்ச் லைட் வெளிச்சம் தெரிவதைக்கண்டு வீரர்கள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர். அங்கு பிரான்சிஸ்கோ ஜபாடா (42) என்ற தொழிலாளி ஒரு சிறு பாறை இடுக்கில் வெள்ளநீர் சூழ உணவின்றி உயிருக்குப் போராடி கொண்டிருந்தார்.

மற்றொரு தொழிலாளி உயிரிழந்த நிலையில் ராணுவ வீரர்கள் உடனடியாக ஜபாடாவை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com