சுரங்க முறைகேடு: ரூ.7 லட்சம் கோடி நஷ்டஈடு வழங்க சீனாவுக்கு உத்தரவு


சுரங்க முறைகேடு: ரூ.7 லட்சம் கோடி நஷ்டஈடு வழங்க சீனாவுக்கு உத்தரவு
x

அரிய வகை கனிமங்களை வெட்டி எடுத்து உலக நாடுகளுக்கு சீனா சப்ளை செய்து வருகிறது.

லூசாகா,

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் சீன அரசாங்கத்திற்கு சொந்தமான சுரங்க நிறுவனம் ஒன்று அங்குள்ள பகுதியை குத்தகைக்கு எடுத்து சுரங்கம் தோண்டி வருகிறது. இந்த சுரங்கம் மூலமாக அரிய வகை கனிமங்களை வெட்டி எடுத்து உலக நாடுகளுக்கு சப்ளை செய்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த பிப்ரவரியில் இந்த சுரங்கத்தில் இருந்த கழிவுநீர் தேக்கம் உடைந்தது. இதனால் அதில் இருந்து வெளியேறிய அதிக அளவிலான நச்சுத்தன்மை கொண்ட கழிவுநீர் ஆற்றில் கலந்தது. இதனால் அந்த ஆற்று நீர், குடிநீருக்கு தகுதியில்லாததாக மாறியது. அந்த நீரில் இருந்த மீன்கள் செத்து மிதந்ததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்தது.

இதனை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அந்த நாட்டு கோர்ட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது. விசாரணையில் சீன அரசுக்கு சொந்தமான அந்த நிறுவனம் ரூ.7 லட்சம் கோடி நஷ்டஈடு வழங்குமாறு தீர்ப்பு அளித்துள்ளது.

1 More update

Next Story