ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசி; சோதனையை தொடங்கிய மாடர்னா நிறுவனம்!

ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக செயல்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் சோதனையை மாடர்னா நிறுவனம் தொடங்கியது.
ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசி; சோதனையை தொடங்கிய மாடர்னா நிறுவனம்!
Published on

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் ஒமைக்ரான் அதிவேகமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒமைக்ரானிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் பல்வேறு நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள மாடர்னா நிறுவனம் ஒமைக்ரான் வைரசை எதிர்கொள்ள பிரத்தியேகமாக பூஸ்டர் தடுப்பூசியை தயாரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அந்த தடுப்பூசியின் பரிசோதனையை மேற்கொண்டு வருவதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக இரண்டு டோஸ் மாடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்ட 600 பேரிடம் இந்த சோதனையை நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தது.

அதன்படி, பிரத்யேக தடுப்பூசிக்கான பரிசோதனையை 600 பேரிடம் தொடங்கியுள்ளது மாடர்னா நிறுவனம்.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களில் பாதி பேர் 6 மாதங்களுக்கு முன்னர் மாடர்னா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள் ஆவர். மீதி உள்ளவர்கள் 2 டோஸ் மாடர்னா தடுப்பூசியுடன் கூடுதலாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டோர் ஆவர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com