ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
Published on

பிஷ்கேக்

ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானை பிரதமர் மோடி இன்று சந்தித்தார்.

உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அதன்படி பயணத்தின் முதல் நாடாக உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயெவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஷாங்காய் உச்சி மாநாடு

இதனை தொடந்து உஸ்பெகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து கிர்கிஸ்தான் புறப்பட்டு சென்றார். கிர்கிஸ்தான் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் சதிர் நர்கோஜோ உலு ஜபரோவ் வரவேற்றார். உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்பட பல தலைவர்கள் கிரிகிஸ்தான் வந்துள்ளனர்.

பிரதமர் மோடி - அதிபர் பெசஸ்கியான் சந்திப்பு

இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானை பிரதமர் மோடி சந்தித்தார். கிர்கிஸ்தான் தலைவர் பிஷ்கேக்கில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com