

மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷிய படைகள் தீவிர தாக்குதல் தொடுத்து வரும் வேளையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொண்டார்.
உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை ரஷியா கைப்பற்றியதன் 8-வது ஆண்டு விழாவையொட்டி, லுஸ்னிகி மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடந்தது.
மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் திரண்டிருந்ததாக மாஸ்கோ போலீசார் தெரிவித்தனர். அத்துடன் இசை நிகழ்ச்சியும் நடந்தது. பிரபல பாடகர் ஒலெக் காஸ்மனோவ் பங்கேற்று பாடினார்.
இதில் கலந்து கொண்ட புதினை உக்ரைனில் நாஜியிசத்தை எதிர்த்து புதின் போராடுகிறார் என்று பலர் பாராட்டி பேசினர்.