சந்திரன் ஈரமானதா அல்லது உலர்ந்து உள்ளதா என விஞ்ஞானிகள் குழப்பம்

சந்திரன் ஈரமானதா அல்லது உலர்ந்து உள்ளதா என விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர்.
சந்திரன் ஈரமானதா அல்லது உலர்ந்து உள்ளதா என விஞ்ஞானிகள் குழப்பம்
Published on

பூமியின் துணைக்கிரகமான நிலாவில் நீர் இருப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் இதுதொடர்பில் 1972 ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் விஞ்ஞானிகள் தற்போது மீண்டும் இது குறித்து பகுப்பாய்வு செய்தனர்.

செயற்கைகோளிலிருந்து பெறப்பட்ட புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது அங்கு நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் தென்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஜேம்ஸ் டே என்பவரது தலைமையிலான புவியியலாளர் குழு ஒன்றே இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

இதன் போது அப்பல்லோ16 யிலிருந்து பெறப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் மீண்டும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 66095 அல்லது ருஸ்டி ராக் என அறியப்படும் கற்பாறை தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பாறையானது அப்பல்லோ 16 திட்டத்தின் போது தரையிறங்கிய பகுதி ஆகும். நிலாவின் மேற்பரப்பானது நாம் எண்ணியதைப் போல் அல்லாது வறட்சியாக காணப்படுவது 45 வருடங்கள் கழித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com