

வாஷிங்டன்,
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன.
தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 14-ம் தேதி முதல் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
காபூல் விமான நிலையத்தில் நேற்று இரவு இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அமெரிக்க படையினர் உள்பட 73-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.