உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு 1,31,319 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு 1 லட்சத்து 31 ஆயிரத்து 319 பேர் பலியாகி உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு 1,31,319 பேர் பலி
Published on

பாரீஸ்,

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி பிரான்ஸ் நாட்டின் ஏ.எப்.பி. என்ற சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 1 லட்சத்து 31 ஆயிரத்து 319 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 3ல் இரு பங்கு மக்கள் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஐரோப்பிய நாடுகளில் 88 ஆயிரத்து 716 பேர் பலியாகி உள்ளனர். இதுவே அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 26 ஆயிரத்து 950 ஆக உயர்ந்து உள்ளது.

இதனை தொடர்ந்து, இத்தாலி (21,645), ஸ்பெயின் (18,579) மற்றும் பிரான்ஸ் (17,167) ஆகிய நாடுகள் உள்ளன என தெரிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com