ஒமைக்ரான் தொற்று பாதிப்பு; ஒரே நாளில் 2,800 விமானங்கள் ரத்து

நேற்று மட்டும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் சுமார் 2,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் தொற்று பாதிப்பு; ஒரே நாளில் 2,800 விமானங்கள் ரத்து
Published on

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டாவும், ஒமைக்ரானும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.குறிப்பாக அமெரிக்காவில் கடந்த வாரம் முதல் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக உயர்ந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மட்டும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் சுமார் 2,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 12,000 விமானங்கள் தாமதமாகியுள்ளன. வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் விமான நிலைய பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ள காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து ஜெட் புளு விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாவது :

ஜனவரி 2 ஆம் தேதிக்கு முன்னர் பயணிகள் மேற்கொள்ள இருக்கும் அத்தியாவசிய பயணங்களை தவிர்க்குமாறு கேட்டு கொள்கிறோம். இனி வரும் நாள்களில் அமெரிக்காவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயரக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com