ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 40 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் 40 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 40 பேர் காயம்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் வெளிநாட்டவர் வசித்த வளாக பகுதியில் இன்று கார் வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்து உள்ளது. இதனால் அருகில் இருந்த குடியிருப்பு வீடுகள் பலத்த சேதமடைந்தன.

இந்த சம்பவத்தில் 40 பேர் காயமடைந்தனர். இந்த வளாகத்தில் சமீபத்தில் ஐ.நா. சபை ஊழியர்கள் சிலர் வசித்து, பணிபுரிந்து வந்தனர். ஆனால் சம்பவம் நடந்தபொழுது ஒரு சில காவலர்கள் இருந்தனர் என்றும் மற்றவர்கள் யாரும் இல்லை என்றும் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி நஜீப் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து வேறு தாக்குதல்காரர்கள் யாரும் உள்ளனரா என சோதனை செய்வதற்காக சிறப்பு போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com